1. Home
  2. தமிழ்நாடு

கோவை மக்களே உஷார்..! இப்படியும் வருவார்கள் மோசடி மன்னர்கள்...!

1

கோவை மாநகரில் மோசடி கும்பல் ஒன்று சமீபகாலமாக பணம் பறிக்கும் செயலை செய்து வருகிறது.அதாவது  தற்கொலை செய்து கொண்டவர்களின் பட்டியலை சேகரித்து அவர்கள் குடும்பத்தினரிடம் அரசு நிவாரண உதவித்தொகையைப் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்து வருகிறது.

தற்கொலை செய்து கொண்டவர்களின் பெயர், அவர்களின் குடும்ப விவரங்கள், அவர்கள் தங்கியுள்ள முகவரி என எல்லாவற்றையும் எப்படியோ பெற்றுக்கொண்டு, அவர்களை முதலில் இந்த கும்பல் நேரில் சந்திக்கிறது.  தாங்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வருவதாக கூறி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை அதிகபட்சம் ரூ.2.5 லட்சம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அதற்காக சில விண்ணப்பங்களில் கையெழுத்து போட வேண்டும் என்று கூறி அவர்களிடம் முதலில் நம்பிக்கை ஏற்படுத்தும்படி பேசுகின்றனர்.

அதற்குப் பின்னர் இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்வதற்கு கட்டணமாக ரூ.25,000 செலுத்தினால் அதன் பின்னர் ரூ.2.5லட்சம் கிடைக்கும் என்கின்றனர். ஸ்மர்ட்டாக உடைய அணிந்து வந்து உதவுவது போல பேசும் இந்த நபர்களை நம்பி ஏழை மக்கள் ஏமாந்து பணத்தை கொடுத்து விடுகின்றனர்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு தாங்கள் சொல்லும் ஆவணங்களை எடுத்து வருமாறு கூறிவிட்டு அந்த கும்பல் காணாமல் போய்விடுகிறது. உண்மை என்னவென்று தெரியாமல் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டது இந்த ஏழை மக்களுக்கு தெரிகிறது.

இது குறித்த சிலர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்ப்பு கூட்டத்திலும் சிலர் போலீசாரிடமும் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே எந்த ஒரு நபரும் தங்களை அணுகி அரசிடம் இருந்து நிவாரணத் தொகை பெற்று தருவதாக கூறி முன் வந்தாலும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும், அவர்கள் பற்றி புகார் தெரிவிக்கவும் காவல் துறையினர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Trending News

Latest News

You May Like