1. Home
  2. தமிழ்நாடு

கோவை மக்களே..! குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்துங்கள்..!

1

கோயம்பத்தூரில் குடிநீர் விநியோகம் வழங்கும் பில்லூர் I மற்றும் II குடிநீர் திட்டத்தில் குடிநீர் சேகரித்து கொண்டுவரும் பிரதான குழாய்களில் கட்டன் மலை என்ற இடத்தில் பராமரிப்பு பணிகள் 24.02.2025 முதல் 25.02.2025 ஆகிய இரண்டு நாட்கள் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படவுள்ளது.
 

இதனால் பில்லூர் பில்லூர் 1, மற்றும் பில்லூர் 2 குடிநீர் திட்டத்தில் குடிநீர் சேகரிப்பு இருக்காது என்பதால், இத்திட்டங்களின் மூலம் குடிநீர் விநியோகம் பெறும் பகுதிகளான சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, கணபதி மாநகர், காந்திமா நகர், சங்கனூர் ரோடு கணபதி, ஆவாரம்பாளையம், பீளமேடு, சவுரிபாளையம், காந்திபுரம், வ உ சி பூங்கா, சித்தாபுதூர், ராமநாதபுரம், டவுன்ஹால், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், விளாங்குறிச்சி மற்றும் உக்கடம் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோக நாட்களின் இடைவெளி அதிகமாகும் என்பதை தெரிவிக்கப்படுகிறது.
 

எனவே, பொதுமக்கள் மற்ற குடிநீர் ஆதாரங்கள் மூலம் வழங்கப்படும் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

Trending News

Latest News

You May Like