1. Home
  2. தமிழ்நாடு

சென்னை மக்களே உங்கள் ஏரியா மழையால் பாதிப்பா..? மாநகராட்சி உதவி எண் அறிவிப்பு !

சென்னை மக்களே உங்கள் ஏரியா மழையால் பாதிப்பா..? மாநகராட்சி உதவி எண் அறிவிப்பு !

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. பெரும்பாலான சாலைகள் தண்ணிரில் மிதக்கின்றன. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வட மாவட்டங்களான, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை இடைவிடாமல் பெய்த மழையால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதந்தன. சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுவாகனங்கள், பேருந்துகள் ஊர்ந்து சென்றன. ஏராளமான வீடுகளுக்கு தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர்.

சென்னை மக்களே உங்கள் ஏரியா மழையால் பாதிப்பா..? மாநகராட்சி உதவி எண் அறிவிப்பு !

மழைநீரை அகற்றி போக்குவரத்தை சரிசெய்ய சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதனிடையே, மழை காரணமாக பாதிப்புக்குள்ளான மக்கள் புகார்கள் தெரிவிக்க அவசர எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

044 2538 4530, 044 2538 4540. ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் உதவிகள் குறித்து தெரிவிக்கலாம். அதேபோல் 24/7 இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு மையத்தினையும் (தொலைபேசி எண்: 1913) பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களே உங்கள் ஏரியா மழையால் பாதிப்பா..? மாநகராட்சி உதவி எண் அறிவிப்பு !

சென்னையில் தண்ணீர் தேங்கினால் மரங்கள் விழுந்தால் அகற்றுவதற்கு மர அறுவை இயந்திரங்கள், மோட்டார் பம்புகள், படகுகள், நிவாரண மையங்கள், நடமாடும் மருத்துவக் குழுக்கள், பொது சமையல் அறை, அம்மா உணவகங்கள் தயாராக இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மக்களே உங்கள் ஏரியா மழையால் பாதிப்பா..? மாநகராட்சி உதவி எண் அறிவிப்பு !

மழை காரணமாக பொதுமக்கள் வெளியில் தேவையின்றி நடந்து செல்வதை தவிர்க்கலாம். அறுந்துகிடக்கும் மின்சார கம்பிகள் இருப்பின் மாநகராட்சிக்கு தெரிவிக்கலாம். சாய்ந்து கிடக்கும் மரங்கள் குறித்தும் உடனடியாக மாநகராட்சிக்கு தெரிவிக்கலாம் எனவும் மக்களை மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like