1. Home
  2. தமிழ்நாடு

சென்னை மக்களே இது உங்களுக்காக..! 55 மின்சார ரயில்கள் ரத்து...

1

சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

பணிமனையில் பராமரிப்பு பணிகள், தண்டவாள பராமரிப்பு பணிகள், பொறியியல், சிக்னல் பணிகள் காரணமாக, மின்சார ரயில்கள் அவ்வப்போது குறிப்பிட்ட வழித்தடங்களில் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ரத்து செய்யப்படுவது வழக்கம். ரயிலை பாதுகாப்பாக இயக்குவதற்காக, அவ்வப்போது தெற்கு ரயில்வே சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சிரமத்தை தவிர்க்கும் வகையில், முன்கூட்டியே மின்சார ரயில் சேவை பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்படும். அதன்படி, தற்போது 2ஆம் கட்ட பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இரண்டாம் கட்ட பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like