1. Home
  2. தமிழ்நாடு

சென்னை மக்களே இந்த எண்களை குறிச்சி வச்சுக்கோங்க..!

1

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவக்கூடும் என்றும் , மேலும் வட மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா கடலோர பகுதிகளில் 16ஆம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நவம்பர் 17ஆம் தேதி ஒரிசா கடலோர ர பகுதிகளில் நிலவு கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் எடுக்க சுழற்சியும் நிலவி வருகிறது.

சென்னையில் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண் அறிவிப்பு

சென்னையில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. புகார்களை தெரிவிக்க 044-45674567 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். 2,149 களப்பணியாளர்களுடன், 300 தூர்வாரும் இயந்திரங்கள், 66 அதிவேக கழிவு நீர் உறிஞ்சும் வாகனங்கள் தயார் நிலையில் இருப்பதாக குடிநீர் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

1

சென்னையில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி, 044 2561 9206, 044 2561 9207, 044 2561 9208 மற்றும் இலவச உதவி எண் 1913, வாட்ஸ் அப் எண் 9445477205 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்
 சென்னையில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்கள் அறிவித்தது சென்னை மாநகராட்சி. சமூக வலைதளங்களில் புகார் தெரிவிக்கும்போது #ChennaiCorporation அல்லது #ChennaiRains ஹாஷ்டாகை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like