சென்னை மக்களே உஷார்..! வந்தாச்சு AI கேமரா..இனி யாரும் தப்ப முடியாது..!

சாலை விதிகளை மீறுபவர்கள், சாலைகளில் வேகமாக ஓட்டுபவர்கள், விதிமீறி குப்பைகளை கொட்டுபவர்கள், எரிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி AI தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
போக்குவரத்து விதிமீறல் செய்பவர்களை பிடித்து அவர்களிடம் அபராதம் வசூலிக்க நேரம் செலவழிக்காமல், அவர்களை போட்டோ எடுத்து நேரடியாக அவர்களின் வாகன எண்ணில் இணைக்கப்பட்டு இருக்கும் விலாசத்திற்கும், போன் எண்ணிற்கும் அபராதம் அனுப்பப்படும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. உதாரணமாக நீங்கள் வேகமாக ஹெல்மெட் போடாமல் பைக்கில் செல்கிறீர்கள். போலீசால் உங்களை பிடிக்க முடியவில்லை என்றாலும், அவர் போட்டோ எடுத்தால் போதும் அபராதம் உங்களை தேடி வருகிறது.
இந்த நிலையில்தான் சென்னையில் தெருவிற்கு தெரு தற்போது ஏஐ கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக ஜிஎஸ்டி சாலை, அண்ணா நகரில் ஏஐ கேமரா வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. முன்பு குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் ₹1,000 முதல் ₹1,500 வரை இருந்தது. புதிய விதிகளின்படி, குற்றவாளிகளுக்கு ₹10,000 அபராதம் மற்றும்/அல்லது முதல் மீறலுக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு ₹15,000 அபராதம் மற்றும்/அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
அபராதம் ₹100ல் இருந்து ₹1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் மூன்று மாதங்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படும். சீட் பெல்ட்டைக் அணிய தவறினால் இனி ₹1,000 அபராதம் விதிக்கப்படும், இது முந்தைய ₹100ஐ விட பத்து மடங்கு அதிகமாகும். வாகனம் ஓட்டும் போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்தினால் இதற்கு முன்பு ₹500 அபராதம் விதிக்கப்பட்டது, இனி அபராதம் ₹5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் இனி ₹5,000 அபராதம் விதிக்கப்படும். பல மாநிலங்களில் ரூ.2000 அபராதம் இருந்தது. டிரிபிள் ரைடிங் அபராதம் ₹100ல் இருந்து ₹1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி நிர்வாகம் GCC ஸ்பாட் ஃபைன் வசூலிப்பதற்காக IOB இலிருந்து 468 PoS சாதனங்களைப் பெற்றுள்ளது. இதில் 70 ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு உள்ளது. செயல்படுத்தப்பட்ட சில நாட்களில் 289 பரிவர்த்தனைகள். 5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அபராதம் செய்யும் முறை வரும் நாட்களில் தீவிரப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் பல்வேறு விதிகளை மீறும் குடியிருப்பாளர்களுக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும் ஸ்பாட் பைன் முறையை கொண்டு வந்து உள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) ஊழியர்கள் சாலையில் குப்பைகளை கண்மூடித்தனமாக கொட்டுவது, கழிவுகளை தரம் பிரிக்காதது, சட்டவிரோத கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கால்நடைகளை சாலையில் விடுவது ஆகியவற்றிற்கு ஸ்பாட் பைன்.போடப்படும் மாநகராட்சி நிர்வாகிகள் இதற்காக பாயின்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) கருவிகளைப் பயன்படுத்தி அபராதத் தொகையை வசூலிப்பார்கள். இந்த சாதனங்களைப் பயன்படுத்தி சொத்து வரி கூட வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக சுமார் 500 பிஓஎஸ் கருவிகள் வாங்கப்பட்டு மாநகராட்சி பணியாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது, சாலை விதிகளை மீறும் போது போக்குவரத்து காவலர்கள் விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது போல் பல்வேறு குடிமை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.