சென்னை மக்களே எச்சரிக்கை..! அதி கனமழை பெய்யும் வாய்ப்புகள் அதிகம்..!
சென்னையில் மட்டும் நேற்றிரவு முதலே இடைவிடாது மழை கொட்டி வருகிறது. மேலும் தற்போதுள்ள நிலையை காட்டிலும் மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் கவனமுடன் இருக்குமாறு தமிழக அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் மழை நிலவரம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரெட் அலர்ட் என்னும் அதி கனமழை பெய்யும் வாய்ப்புகள் அதிகம். கிட்டத்தட்ட 204 மில்லிமீட்டருக்கு மேல தான் மழை பதிவாகும். அதாவது 20 செ.மீட்டருக்கும் அதிகமாகத்தான் மழை இருக்கும் என்பதாகும்.
ஆரஞ்சு அலர்ட்
அக்.15; ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை
அக்.16: ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர்
அக்.17: திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி
ரெட் அலர்ட்
அக். 15 மற்றும் அக்16: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்