மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க..! டெங்கு பாதிப்பைத் தவிர்க்க செய்ய வேண்டியவை..!
நாம் டெங்கு பாதிப்பைத் தவிர்க்க செய்ய வேண்டியவை
காலி இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீடு மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களைத் தூய்மைப்படுத்தி எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பகலில் கொசுக்கடியில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். அதற்காக, கொசுவலைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உடல் முழுவதும் கவராகும் வகையில் ஆடைகள் அணிய வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் பத்திரங்களை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். வீட்டில் உள்ள கழிவறைகளை சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். குடிநீரை நன்கு காய்ச்சி, வடிகட்டிய பிறகு பருக வேண்டும்.
காய்ச்சல், சோர்வு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.