1. Home
  2. தமிழ்நாடு

மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க..! தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் இதுதான்?

1

தமிழ்நாட்டில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளியூர், வெளிமாநிலங்களில் உள்ள மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.இன்று காலையில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கிறோம்.

இந்நிலையில் தான் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் இந்த நேரக்கட்டுப்பாடு என்பது அந்தந்த மாநில அரசுகளால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவின் அடிப்படையில் நேரக்கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இந்த நேரக்கட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என்பது காற்று மாசடைவதாகும். நாள் முழுவதும் பட்டாசு வெடிப்பதால் வெளியேறும் புகை காற்றை மாசுப்படுத்துகிறது. இதனை தடுக்கவே நேரக்கட்டுப்பாட்டு என்பது விதிக்கப்படுகிறது. அதன்படி இந்த தீபாவளிக்கு தமிழ்நாட்டில் 2 மணிநேரம் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மட்டுமே மக்கள் பட்டாசுகளை உரிய பாதுகாப்புடன் வெடிக்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like