1. Home
  2. தமிழ்நாடு

மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க..! ப்ளூ வைரஸ் காய்ச்சல்! இதில் இருந்து தப்பிக்க வழிமுறைகள் என்ன?

1

கோவை மாவட்டத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்பட்டு வருகிறது. குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் எளிதாக ஏற்படக் கூடிய வாய்ப்பு உண்டு.

இந்த காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, இருமல் ஆகியன இந்த வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக தற்போது காணப்படுகிறது. பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 7 நாட்களில் குணமடைந்து விடுவர். நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இருதய நோய், புற்றுநோய் போன்ற இணை நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கண்டிப்பாக மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.

இந்த காலகட்டத்தில் பொது மக்கள் அனைவரும் குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து பின்னர் ஆறவைத்து குடிக்க வேண்டும். தொண்டையில் கரகரப்பு இருக்கும் பட்சத்தில் சமையல் கல் உப்பை வெந்நீரில் போட்டு, தொண்டையில் படுமாறு அனைவரும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

இருமும் போதும் தும்மும் போதும் உங்கள் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மக்கள் மூடிக் கொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.

வீட்டுக்கு வெளியே சென்று வந்தபிறகு கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவிய பிறகே, வீட்டுக்குள் நுழைய வேண்டும், வைட்டமின் சி. புரத சத்து மிகுந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். மேற்கண்ட செயல்களை செய்வதன் மூலம் வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.

Trending News

Latest News

You May Like