1. Home
  2. தமிழ்நாடு

மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க..! தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

1

சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழையால் நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காக மற்றும் தேவையற்ற விபத்துகளை தவிர்ப்பதற்காக அரசு மற்றும் பொது நிறுவனங்கள் அனைத்திற்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் புயல் கரையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதன்படி இன்று இரவு புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படிப்படியாக வடக்கு திசையில் நகரும் இப்புயல் ஏற்கனவே அறிவித்தபடி நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயல் கரையை நெருங்க நெருங்க நிலப்பகுதியில் வீசும் தரை காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. அவ்வப்போது சூறைக் காற்றின் வேகத்தையும் உணர முடிகிறது. 

புயல் கரையை கடக்கத் தொடங்கும் வரை காற்றின் வேகம் இதே அளவில் தான் இருக்கும் என்றும் புயலானது கரையை கடக்க தொடங்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 110 கிலோ மீட்டர் வரை வீச கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிதீவிர புயலாக கரையை கடக்கும் மிக்ஜம் படிப்படியாக வலுவிழக்கும்.

புயலின் தாக்கத்தால் இன்னும் இரண்டு நாட்களுக்கு வட கடலோர பகுதிகளில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கனமழை பெய்யும் மாவட்டங்கள் வெளியாகின 

மிக கனமழை

🌧️ திருவள்ளூர்
🌧️ சென்னை
🌧️ செங்கல்பட்டு
🌧️ காஞ்சிபுரம்
🌧️ ராணிப்பேட்டை

கனமழை

🌧️ வேலூர்
🌧️ விழுப்புரம்
🌧️ திருவண்ணாமலை

மேலும் மீட்பு பணிகளுக்கு மக்கள் தொடர்புகொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிப்பு! 

1

Trending News

Latest News

You May Like