1. Home
  2. தமிழ்நாடு

கூட்டம் கூட்டமாக கிளம்பிய மக்கள்..! பிரியாணி சாப்பிட்டா ரூ.1 லட்சம் பரிசு..!

1

கோவை ரயில் நிலையம் அருகே ஆரம்பிக்கப்பட்ட BOCHE ஃபுட் எக்ஸ்பிரஸ் எனும் ரயில் பேட்டி தோற்றம் கொண்ட உணவகம் அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிட்டால் ரூ. 1 லட்சம் , 5 பிரியாணி சாப்பிட்டால் ரூ.50,000;  4 பிரியாணி சாப்பிட்டால் ரூ.25,000 என்ற அறிவிப்பை வெளியிட்டது.


இந்த போட்டி (Briyani Belly) இன்று மதியம் 1 மணி முதல் 4 மணி வரை இந்த போட்டி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் போட்டிபோட்டுக்கொண்டு இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அதிகப்படியாக பங்கேற்க வந்த போட்டியாளர்கள், உணவு பிரியர்கள் தங்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தியதால் ரயில் நிலையம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்ற நபர்கள் பலரும் பிற உணவகங்களில் வழங்கப்படும் பிரியாணி ஒன்றின் அளவை விட இந்த போட்டியில் வழங்கப்பட்ட பிரியாணியின் அதிகமாக இருந்ததாக கூறியுள்ளனர்.  

Trending News

Latest News

You May Like