1. Home
  2. தமிழ்நாடு

கடல் அலை போல் திரண்டு வந்த மக்கள்..!சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த விமான சாகச நிகழ்ச்சி!

1

இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 72 விமானங்களில் வீரர்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்கள். காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்தச் சாகச நிகழ்ச்சியைக் காண மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.

இந்நிலையில், விமானப்படை சாகசம்குறித்து விமானப்படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-சென்னை மெரினாவில் நடந்த வண்ணமயமான சாகசத்தைச் சுமார் 15 லட்சம் மக்கள் கண்டுகளித்துள்ளது, லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

டெல்லி, சண்டிகர், பிரயாக்ராஜ் நகரங்களிலும் வான் கண்காட்சி நடந்திருக்கிறது. எனினும், நிகழ்ச்சியின் அளவிலும் பார்வையாளர்களின் எண்ணிக்கையிலும் சென்னைதான் மிகப்பெரியது. 

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like