காஞ்சிபுரம் அருகே தண்டவாளத் தடுப்பை உடைத்து சரக்கு ரயில் சாலைக்கு வந்ததால் மக்கள் அச்சம்..!

கர்நாடகா மாநிலம், பெல்லாரியில் இருந்து இரும்புத் தொழிற்சாலைக்கு காயில் ஏற்றி வந்த சரக்கு ரயில், காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்திற்கு வந்த போது சிக்னல் கோளாறு காரணமாக, விபத்தில் சிக்கியது. சிக்னல் கோளாறு இருப்பதை அறிந்த ஓட்டுநர், ரயிலை நிறுத்த முற்பட்ட போது, சரக்கு முனையத்தில் உள்ள தண்டவாளத்தின் தடுப்பை உடைத்துக் கொண்டு ரயில் வெளியேறி சாலைக்கு வந்தது.
இந்த விபத்தில் சாலையில் இருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தனர். அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் பெரிதாக இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.