மக்களே, மறந்தும் இதை செய்து விடாதீர்கள்… மீறினால் ரூ.1000 அபராதம்.. மாநகராட்சி அதிரடி..!

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதை பறைசாற்றும் வகையில், வீட்டில் பயன்படுத்தி தூக்கி எறியும் பொருட்களை ஒவ்வொரு ஆண்டும் தீயிட்டுக் கொளுத்தி, அதனைக் கொண்டாடுவதுதான் போகிப் பண்டிகை.
சில கிராமங்களில், எல்லோரும் ஒரே இடத்தில் அனைத்து பழைய பொருட்களையும் தீயிட்டுக் கொளுத்தி, அதை சுற்றி ஆடியும், பாடியும், மேளமடித்தும் உற்சாகத்தை வெளிப்படுத்துவார்கள்.

நல்ல முறையில் அறுவடை முடிந்திருக்கும் நேரமென்பதாலும், தைத் திருநாளுக்கு முந்தைய நாள் என்பதாலும், உற்சாகத்துக்கு எந்த வகையிலும் குறைவிருக்காது.
ஆனால், தற்போதைய சுற்றுச்சூழல் பிரச்னையில், போகிப் பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என்று பல்வேறு தரப்பிலும் வேண்டுகோள் வைக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் போகிப் பண்டிகையையொட்டி விதிகளை மீறி பிளாஸ்டிக், டயர்களை எரித்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து மண்டலங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.