1. Home
  2. தமிழ்நாடு

இனி பொதுமக்கள் வாட்ஸ்ஆப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்..!

1

மின் தேவையை சமாளிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்கிறது. அனல் மின் நிலையம், நீர் மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் மட்டுமின்றி காற்றாலை மூலமும் மின்சாரம் பெறப்படுகிறது.

 

அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுவதால் வாரியத்திற்கு தொடர்ந்து நஷ்டம் அதிகரித்து வருகிறது. இந்த வருடம் கோடை வெயில் மார்ச் மாதமே கொளுத்த தொடங்கி விட்டதால் மின்தேவை அதிகரித்தது. 

 

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, மின் தேவை இந்த வருடம் 3 ஆயிரம் மெகாவாட்டிற்கு கூடுதலாக அதிகரித்து உள்ளது. இது மின் வாரியத்திற்கு மேலும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் வீடுகளுக்கு 100  யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் வாரியத்திற்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இழப்பை சரிகட்ட பல்வேறு நடவடிக்கைகளை வாரியம் மேற்கொண்டு வருகிறது. 

அந்த அடிப்படையில் ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருப்பவர்களால் வாரியத்திற்கு இழப்பு ஏற்படுவதை தடுக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வீட்டிற்கு ஒரு மின் இணைப்பு வீதம் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் நிலையில் ஒரே வீட்டில் 2 அல்லது அதற்கு மேல் இணைப்புகள் வைத்துக் கொண்டு மின் கட்டணம் குறைவாக செலுத்தி வருவதை தடுக்க தற்போது கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

அதன் அடிப்படையில் மின்வாரிய அதிகாரிகள் சென்னையில் ஆய்வு பணியை தொடங்கியுள்ளனர். அவர்களிடம் உள்ள பட்டியலை வைத்து அதில் உள்ள வீடுகளில் சோதனை செய்கிறார்கள். 

அப்போது ஒரே பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு இருப்பதை ஏற்று ஒரே இணைப்பாக மாற்றுவதற்கு ஒப்புக்கொண்டால் மற்ற இணைப்புகள் துண்டிக்கப்படும். 

அதனை ஏற்க மறுப்பவர்களுக்கு 3 இணைப்புகளின் மொத்த யூனிட்டையும் சேர்த்து அதில் 100 யூனிட் கழித்து விட்டு மீதமுள்ள யூனிட்டிற்கு சிலாப்படி எவ்வளவு வருகிறதோ அதனை கணக்கிட்டு பில் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட மின் கணக்கீட்டில் தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு எப்போதும் செலுத்தும் தொகையை விட கூடுதலாக மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்பட்டு, முழு யூனிட்டுக்கும் கட்டணம் வசூலித்திருப்பதாக தகவல் வெளியானது. இதனை தற்போது தமிழக மின் வாரியம் மறுத்துள்ளது.

மேலும் பொதுமக்கள் இனி வாட்ஸ்ஆப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், 

தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கட்டணம் செலுத்துவதை எளிதாக்கி உள்ளது. பயன்பாடு 500 யூனிட்களுக்கு மேல் உள்ள நுகர்வோர்களுக்கு யு.பி.ஐ. வாயிலாக கட்டணம் செலுத்தும் வாட்ஸ்ஆப் செய்தி வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

வாட்ஸ்ஆப்பில் TANGEDCO இலச்சினை மற்றும் பச்சை குறியீடு, எண் 94987 94987 ஆகியவற்றை உறுதி செய்யவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like