1. Home
  2. தமிழ்நாடு

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பிறக்கும்போதே பணக்கார யோகத்துடன் பிறக்கின்றனராம்..!

1

உங்கள் அதிர்ஷ்ட எண் என்னவென்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அதை எவ்வாறு கணக்கிடுவது என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.

உதாரணமாக, ஒருவரின் பிறந்த தேதி 01-05-1987 எனில், அந்த நபரின் 'அதிர்ஷ்டம் எண் 1’ ஆக இருக்கும். ஒருவரின் பிறந்த தேதி 15-08-1999 எனில், அந்த நபரின் அதிர்ஷ்ட எண் 1+5 = 6 ஆக இருக்கும். அதிர்ஷ்ட எண் என்பது உங்கள் பிறந்த தேதிகளின் கூட்டுத்தொகையாகும்.

பிறந்த தேதி 1 முதல் 9 வரை இருந்தால், அவற்றை கூட்ட வேண்டிய அவசியமில்லை. பிறந்த தேதி 10 க்குப் பிறகு ஏதேனும் எண்ணாக இருந்தால், உங்கள் பிறந்த தேதியின் இரண்டு எண்களையும் கூட்டினால், வரும் தொகை உங்கள் அதிர்ஷ்ட எண்ணாக இருக்கும்.

உதாரணமாக, ஒரு நபர் ஆகஸ்ட் 29, 1998 அன்று பிறந்துள்ளார் எனில்  2+9+8+1+9+8+8, இவை அனைத்தின் கூட்டுத்தொகை 45 ஆக இருக்கும். இதை 'ஒற்றை இலக்க' எண்ணாக மாற்றினால் அவரது அதிர்ஷ்ட எண் (4+5) 9 ஆகும்.இந்த வழிமுறையில் நீங்களும் உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணைக் கணக்கிடலாம்.

ஜோதிடத்தில், எண் 1 மிகவும் சக்திவாய்ந்த எண்ணாகக் கருதப்படுகிறது. எண் ஒன்று என்பது சூரியனின் எண். கிரகங்களின் அதிபதியாக சூரியன் கருதப்படுகிறார். அதைப்போலவே, எண் 1 இந்த அனைத்து குணங்களையும் கொண்டுள்ளது. சூரியன் உங்களுக்கு வலிமையையும் சக்தியையும் தருகிறது. எண் 1-ஐ அதிர்ஷ்ட எண்ணாக உடையவர்கள்  தலைமைத்துவ குணங்களுடன் திகழ்கிறார்கள். இந்த எண் உங்களுக்கு பலத்தைத் தருகிறது. சூரியன் உங்களுக்கு ஒரு ஒழுக்கத்தைத் தருகிறது. இந்த எண்ணில் பிறந்தவர்கள் பிறக்கும் போதே பணக்கார யோகத்துடனும் பிறக்கின்றனர்.

இரண்டாவது சக்திவாய்ந்த எண் எண் 5 ஆகும். 5 என்பது புதனின் எண்ணாகும். இந்த எண் எண் கணிதத்தில் மாஸ்டர் கீ என்று அழைக்கப்படுகிறது. புதன் உங்களுக்கு வாழ்க்கையில் வலிமையையும் நிலைத்தன்மையையும் தருகிறார். இது உங்கள் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

அடுத்த மிக சக்திவாய்ந்த எண் 6. ஜோதிடத்தில், 6 என்ற எண் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இது சுக்கிரனின் எண், பணம், வீரம், கவர்ச்சி, ஆடம்பரம், உறவுகள் என அனைத்தும் இந்த எண்ணிலிருந்துதான் வருகின்றன. அதாவது, இந்த எண் உங்கள் அதிர்ஷ்ட எண்ணுடன் வந்தால், இவை அனைத்தையும் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் ஜாதகத்தில் 5 மற்றும் 6 எண்கள் இருந்தால், நீங்கள் வாழ்வில் பெரும் செல்வந்தராக வெற்றி பெறுவீர்கள்.

Trending News

Latest News

You May Like