1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்.. வங்கிகள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு..! 4 நாட்கள் பேங்க் இயங்காது..!

1

திங்கட்கிழமை (மார்ச் 24) மற்றும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) இந்த இரண்டு நாட்களும் வங்கி ஊழியர்கள் அகில இந்திய வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறார்கள். இதிலே வங்கி ஊதியர்கள் மட்டுமல்ல, அதிகாரிகள், இயக்குனர் உட்பட அனைத்து பணியிடங்களை சேர்ந்தோரும் பங்கேற்கப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 

அதாவது கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர். குறிப்பாக தனியார் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமல்ல, தனியார் வங்கிகளும் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். வெளிநாட்டு வங்கிகள் இங்கு செயல்படுகிறதால், வெளிநாட்டு வங்கி ஊழியர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். அவர்களுடன் ஊடக வங்கி ஊழியர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். இதனால் மிகப்பெரிய அளவுக்கான போராட்டம் நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது. 

அகில இந்திய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வங்கி பணிகள் வரும் சனிக்கிழமை முதலே பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் வரும் சனிக்கிழமை நான்காவது சனிக்கிழமை என்பதால், வங்கிகளுக்கு பொதுவாக விடுமுறை ஆகும். எனவே சனிக்கிழமை வங்கிகள் செயல்படாது. ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால் அன்றைக்கும் வங்கிகள் செயல்படாது. 

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக தொடர்ந்து 4  நாட்கள் வங்கிகள் செயல்படாமல் போகலாம். இதன் காரணமாக தங்கள் வங்கி சம்பந்தமான பணிகளை இன்றே முடித்து கொள்ளுங்கள்.

Trending News

Latest News

You May Like