1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்..! அடுத்த 4 மணி நேரத்திற்கு வெளிய வர வேண்டாம்..!

1

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் சுட்டெரித்துக் கொண்டுள்ளது.


இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது., தமிழகம், கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும். வெப்ப அலை வீசும் என்பதால் பொதுமக்கள் அசவுகரியமான சூழலை எதிர்கொள்ளலாம்.

இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகள், முதியோர், உடல்நலம் பாதிக்கப்பட்டோர் வெயில் கடுமையாக இருக்கும் நேரத்தில் வெளியே வர வேண்டாம். டெல்டா மற்றும் வட தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழக உள் மாவட்டங்களில் 42 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம், கர்நாடகாவின் உள் மாவட்டங்கள், ஒடிசா, உ.பி, பிஹார் மாநிலங்களுக்கு மஞ்சள் அலர்ட், மேற்கு வங்கத்திற்கு அதிக வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பிற்பகல் நேரத்தில் வெயில் அதிகளவில் இருக்கும் என்பதால், குழந்தைகள், முதியோர் வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ளது.

Trending News

Latest News

You May Like