1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை..!

Q

வானிலை மையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.25) வட வானிலையே நிலவும். எனினும் வங்கக்கடலில் நிலவும் காற்றுச்சூழற்சி தமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து வருகிறது. அதன்காரணமாக பிப்.26 முதல் மாா்ச் 2 வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக கொடைக்கானல் மலைப்பகுதி உள்ளிட்ட மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை: பிப்.28-இல் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மாா்ச் 1- இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இம்மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பிப்.25-இல் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், காலை வேளையில் லேசான பனிமூட்டம் இருக்கும். பிப்.26-இல் சென்னையில் சேலான மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் அந்தமான் கடலில் பிப்.25 முதல் பிப்.27 வரை மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
வரும் 27ம் தேதி முதல் 1ம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது. வரும் 27ம் தேதியன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு. 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஈரோட்டில் அதிக வெப்பம் பதிவு: இதனிடையே, தமிழகத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக ஈரோட்டில் 99.68 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும் பரமத்தி வேலூா் - 98.6 டிகிரி, திருப்பத்தூா் - 97.52 டிகிரி மற்றும் மதுரை விமானநிலையத்தில் - 96.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like