மக்களே உஷார்..! தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் கனமழை?
வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியில கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகரில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 87.8-89.6 டிகிரியை பாரன்ஹீட்டை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 75.2-77 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டியும் இருக்கக்கூடும்.
ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்றும், வடதமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.