1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! இனி இந்த ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை..!

1

தோராயமாக மைனஸ் 78.5°C (-109.3°F) வெப்பநிலையில் உள்ள திட கார்பன் டை ஆக்ஸைடையே உலர் ஐஸ் கட்டி என அழைக்கப்படுகிறது. குளிர்ச்சியான கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை அழுத்தம் கொடுப்பதன் மூலம் திரவ நிலைக்குச் செல்லாமலேயே தின்ம நிலையை அடைய வைப்பதால் இந்த ஐஸ் கட்டி உருவாகிறது. பொதுவாக இந்த உலர் ஐஸ் கட்டி பலவற்றில் கூலிங் ஏஜெண்டாக செயல்படுகிறது. இதன் பயங்கரமான குளிர்ச்சித்தன்மை காரணமாக ஆய்வகங்களில் பல்வேறு சோதனைகளுக்காகவும் திரைப்படங்களில் ஸ்பெஷன் எஃபெக்ட்ஸ்களுக்காகவும் ஷிப்பிங்கின் போது பொருட்களை கெட்டுப் போகாமல் பாதுகாக்கவும் உதவுகிறது.

இதை முறையாக கையாளாவிட்டாலோ அல்லது மோசமான காற்றோட்டமுள்ள பகுதிகளில் வைத்தாலோ மனிதர்களுக்கு தீங்கை ஏற்படுத்தும். இந்த ஐஸ் கட்டியை நேரடியாக தொடுவதன் மூலம் தோல் உறைந்து அல்லது எரிந்து போகும் வாய்ப்புள்ளது. மேலும் இது கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுவதால் காற்றோட்டம் இல்லாத பகுதிகளில் இதை சுவாசிக்கும் போது மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனை எப்போதும் எச்சரிக்கையாகவே கையாள வேண்டும்.

இந்நிலையில்டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ₹10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை, பேச்சு பறிபோகும் ஆபத்து இருப்பதாகவும், உயிரிழப்புகள் நேரலாம் எனவும் உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குழந்தைகளுக்கு நைட்ரஜன் கலந்த எந்த உணவுப் பொருட்களையும் வழங்கக்கூடாது. உணவு விடுதிகளிலும் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது. டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ₹10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றார்  

Trending News

Latest News

You May Like