1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! மதுரையில் இன்றும் நாளையும் போக்குவரத்து மாற்றம்!

1

உலகப்புகழ் பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் மார்ச் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு அதிகப்படியான மக்கள் சுற்றுப்புறங்களில் இருந்து வருகை தருவார்கள். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கான போக்குவரத்து மாற்றம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

வாகன போக்குவரத்து மாற்றம்:

1) திருநகரிலிருந்து மதுரை நகருக்குள் வரும் வாகனங்கள் கிரிவல பாதை மற்றும் திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் செல்வதற்கு அனுமதி இல்லை.இவ்வாகனங்கள் அனைத்தும் GST சாலை வழியாக மூட்டா தோட்டம் சென்று நகருக்குள் செல்ல வேண்டும்.

2) மதுரை நகரிலிருந்து திருப்பரங்குன்றம் மேம்பாலம் வழியாக திருநகர் செல்வதற்கு எந்த வாகனத்திற்கும் அனுமதி இல்லை.இவ்வாகனங்கள் அனைத்தும் மூட்டா தோட்டத்திலிருந்து GST சாலை வழியாக திருநகர் செல்ல வேண்டும்.

3) திருநகரிலிருந்து திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் அனைத்தும் பூங்கா பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள காலி இடத்திலும் திருப்பரங்குன்றம் தெப்பக்குளத்திலுள்ள கட்டண வாகன நிறுத்தத்திலும் அவர்களது வாகனங்களை நிறுத்த வேண்டும்.

4) மதுரை நகரிலிருந்து திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் ஒக்கலிக்கர் மண்டபம் அருகிலுள்ள தெப்பக்களம் கட்டண வாகன நிறுத்தத்திலும் இருசக்கர வாகளங்கள் திருப்பரங்குனற்ம் ஆர்ச்சிலிருந்து மயில் மண்டபம் வரை சாலையின் இருபுறங்களிலும் Single Parking-ஆக நிறுத்த வேண்டும்.

5) திருப்பரங்குன்றம் மயில் மண்டபத்திலிருந்து திருப்பரங்குன்றம் சன்னதி தெரு வரை, DC அலுவலகத்திலிருந்து லாலா கடை வரை மற்றும் நான்கு ரத வீதிகளிலும் எந்த ஒரு வாகனங்களும் நிறுத்துவதற்கு அனுமதி கிடையாது.

6) அவனியாபுரத்திலிருந்து திருக்கோவிலிற்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் அனைத்தும் சரவண பொய்கை வாகன நிறுத்தத்திலும் அதற்கு அருகில் உள்ள சுட்டண வாகன நிறுத்தத்திலும் நிறுத்த வேண்டும்.

7) அவனியாபுரத்திலிருந்து திருப்பரங்குன்றம் சாலை வழியாக நிலையூர் மற்றும் திருநகர் செல்லக்கூடிய பொது போக்குவரத்து இலகு ரக வாகனங்கள் அனைத்தும் KV பள்ளியின் வலது புறம் திரும்பி தியாகராஜர் பொறியியல் கல்லூரி சாலை வழியாக GST ரோடு சென்று செல்ல வேண்டும்.

8) மேற்படி சாலை வழியாக வரக்கூடிய கனரக வாகனங்கள் அனைத்தும் அவனியாபுரம் முத்துப்பட்டி திருப்பரங்குன்றம் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அழகப்பன் நகர் ரயில்வே கேட் வழியாக செல்ல வேண்டும்.


9) திருக்கோவிலுக்கு வரும் அரசு வாகனங்கள் அனைத்தும் அருணகிரி திருமண மண்டப வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.

10) மதுரை நகரிலிருந்து திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் திருப்பரங்குனற்ம் ஆர்ச் அருகிலுள்ள மேம்பாலத்திற்கு கீழ் நிறுத்த வேண்டும்.

11) ஹார்விப்பட்டி மற்றும் நிலையூரிலிருந்து திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகளங்கள் அனைத்தும் நிலையூர் சந்திப்பு அருகிலுள்ள ஆஞ்சிநேயர் கோவில் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.

12) மேற்கண்ட வாகன போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கும்படி மதுரை மாநகர் காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Trending News

Latest News

You May Like