மக்களே உஷார்..! இப்படி தான் புதுசு புதுசா கிளம்புறாங்க...!
2024.ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும். தமிழ்நாட்டில் National Cyber Crime Reporting Portal மூலம் சுமார் 7 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது இந்த மோசடி செயல்பாட்டின் தீவிர தன்மையை வெளிப்படுத்துகிறது.
எவ்வாறு மோசடி செய்யபடுகிறது:
PhonePe மூலம் அனுமதி இல்லாத பணப்பரிவர்த்தனைகளைப் பற்றிய விசாரணையில் PM Kisan Yojna' என்ற மோசடி செயலி பயன்படுத்தபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி பல்வேறு சேனல்கள் மூலம் குறிப்பாக WhatsApp மூலம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இது பயனாளிகளின் SMS பயன்பாட்டையும் மற்றும் சாதனங்களை இயக்குவதையும் கட்டுப்படுத்தகூடியது. மோசடிக்காரர்கள் SMS போக்குவரத்தை தடுத்து அதன்மூலம் UPI செயலிகளில் மாற்றம் செய்து பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு மோசடியாக சேகரிக்கபட்ட தரவுகளை கொண்டு UPI செயலிகளில் பயன்படுத்தி அனுமதி இல்லாத பரிவர்த்தனைகளை மோசடியாக செய்கின்றனர்.
இந்த செயலிகள் பெயர். ஆதார் எண், PAN, மற்றும் பிறந்த தேதி போன்ற முக்கிய தனிப்பட்ட தரவுகளை இணையத்திலிருந்து எடுத்துகொள்கிறது. இந்த அதிநவீன மோசடி தாக்குதல் பலருக்கு நிதி மற்றும் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மோசடிக்காரர்கள் அரசாங்கத்தின் நலதிட்டங்களின் மீதான நம்பிக்கை மற்றும் தேவைகளின் மீதான அச்சதை ஏற்படுத்தி உள்ளார்கள்.