1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! இன்று மாலை செம சம்பவம் இருக்கு.. தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங்!

1

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. மேலும் சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடுமையான வெப்ப அலையும் வீசி வந்தது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதனை தொடர்ந்து தென்தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இந்த மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இருப்பினும் வட தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்து வந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக வடதமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

 இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்றைய வானிலை நிலவரம் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இன்று மாலை அல்லது இரவில் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்க்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இடி மழையால் இன்றும் வட தமிழகம் அதிரும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பெங்களூரிலும் இன்று இடி மின்னலுடன் நல்ல மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்வீட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 


 


 

Trending News

Latest News

You May Like