1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய ஒரு லிமிட் இருக்கு...அதுக்கு மேல் செய்தால் சிக்கல் தான்..!

1

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே வங்கிக் கணக்குகள் உள்ளன. வங்கிக் கணக்கில் நிறைய நன்மைகள் உள்ளன. பணத்தை டெபாசிட் செய்து வைப்பதற்கு மட்டுமல்லாமல், பல விஷயங்களுக்கு வங்கிக் கணக்கு பயன்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் நிறையப் பேர் ஆன்லைன் மூலமாகப் பணம் அனுப்புகின்றனர். மக்கள் கையில் வைத்திருக்கும் பணத்தின் அளவு குறைந்துவிட்டது. வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கையில் எடுக்காமலேயே அப்படியே ஆன்லைன் மூலமாக அனுப்பிவிடுகின்றனர். ஷாப்பிங் செய்வது போன்ற பல்வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்துகின்றனர். சொல்லப்போனால் 10 ரூபாய்க்கு டீ குடிப்பதற்குக் கூட ஆன்லைன் பரிவர்த்தனை செய்கின்றனர்.

வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்திற்கு வட்டியும் கிடைக்கிறது. அந்த வகையில் நிறையப் பேர் தங்களுடைய வங்கிக் கணக்கில் பல லட்சம் ரூபாயை டெபாசிட் செய்து வைத்திருக்கிறார்கள்.

வங்கிக் கணக்கில் ஒரு வரம்புக்கு மேல் இருந்தால் அதற்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்பும். இதுபற்றி நிறையப் பேர் தெரியாமல் இருக்கின்றனர். வீட்டிற்கு வருமான வரி நோட்டீஸ் திடீரென்று வந்தபிறகு தான் இதுபற்றி அவர்களுக்குத் தெரியவரும். உண்மையில் வங்கிக் கணக்கில் பணத்தை வைத்திருப்பதற்கும் விதிமுறை உள்ளது. அதுபற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

CBDT விதிகளின்படி, ஒரு நிதியாண்டில் ஒருவர் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால், அதை வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் (Bank Account) ரூ.10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், வருமான வரி நோட்டீஸ் வரலாம்.

இந்த விதிமுறை பற்றி தெரிந்துகொள்வதோடு, வங்கிக் கணக்கில் வரம்பைத் தாண்டி பணத்தை டெபாசிட் செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நம்முடைய வங்கிக் கணக்குதானே, அதில் எவ்வளவு பணத்தை போட்டாலும் பிரச்சினை இல்லை என்று நினைக்க வேண்டாம். எல்லாத்துக்கும் ஒரு வரம்பு உள்ளது. பணத்தை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் கூட வரம்புகள் உள்ளன. எனவே பணப் பரிவர்த்தனை தொடர்பான வரம்புகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

ஒரே நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட FDகளில் ரூ.10 லட்சம் பணத்தை டெபாசிட் செய்தால், நோடீஸ் வரக்கூடும். இதில் வருமான வரித்துறை பணத்தின் ஆதாரத்தை வெளியிட நோட்டீஸ் அனுப்புகிறது. ஆகையால், பிக்சட் டெபாடிட்டில் (Fixed Deposit) பெரும்பாலான தொகையை காசோலை மூலம் டெபாசிட் செய்வது நல்லது. 

சொத்து வாங்க ரூ.30 லட்சம் அல்லது அதற்கு மேல் பண பரிவர்த்தனை நடந்தால், சொத்து பதிவாளர் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வருமான வரித்துறை உங்கள் பணத்திற்கான மூலத்தை பற்றி கேட்கக்கூடும். நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகள் (Mutual Funds), பத்திரங்கள் அல்லது கடன் பத்திரங்களை ரொக்கமாகச் செலுத்தி வாங்கினாலும், உங்களிடம் கேள்விகள் கேட்கப்படலாம்.

ஒரு வருடத்தில் ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு பில் தொகையை ரொக்கமாக செலுத்தினால், அந்த பணம் எங்கிருந்து வந்தது என வருமான வரித்துறை கேள்வி எழுப்பலாம். இது தவிர, கிரெடிட் கார்டு பில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் செலுத்தினாலும், அந்த தொகை வந்ததன் மூலத்தை பற்றி வருமான வரித்துறையினர் கேள்வி எழுப்பலாம்.

Trending News

Latest News

You May Like