1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! இன்று முதல் 7 நாட்களுக்கு 2-3 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகரிக்கக்கூடும்..!

1

தமிழகத்தில் பொதுவாக ஏப்ரல் மே மாதங்களில் வெப்பம் மக்களை வாட்டி எடுக்கும்.. ஆனால் தற்போது கடந்த சில நாட்களாகவே, வெயில் தாக்கம் நம் மாநிலத்தில் அதிகரித்து காணப்படுகிறது.

தற்போது பல்வேறு பகுதிகளில் வெயில் சதமடிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக ஈரோட்டில் 39 டிகிரி செல்சியல் வெப்பம் பதிவாகியுள்ளது. 

இந்நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,  தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Trending News

Latest News

You May Like