மக்களே உஷார்..! இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை பெய்யும் - தமிழ்நாடு வெதர்மேன்..!
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், மழை குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அப்டேட் கொடுத்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, இன்று முதல் 17 ஆம் தேதி வரை மழை ஆக்டிவாக இருக்கும். இதில் KTCC (சென்னை) நவம்பர் 12-16 வரை இடைவேளையுடன் தினசரி மழையைப் பெறும். தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையுடன் நேற்று இரவு மற்றும் இன்று காலை முதல் பருவமழையின் 5வது சுற்று தொடங்கும்.
12 ஆம் தேதியான இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் மற்ற மாவட்டங்கள் - KTCC மட்டுமின்றி விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், சேலம், பெங்களூரு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், பாண்டி, கள்ளக்குறிச்சி மற்றும் டெல்டாவின் சில பகுதிகள் போன்ற வட மாவட்டங்களிலும் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில், தென் சென்னை மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு முழுவதும் நல்ல மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இப்போது சீரான மழை சில நேரங்களில் தீவிரத்துடன் சுமார் 2 மணிநேரம் தொடரும் என்றும் பின்னர் இடைவெளி இருக்கலாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
முதலில் தென் சென்னை, ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் ஆகிய இடங்களில் மழை நின்று பின்னர் மத்திய மற்றும் வடசென்னையில் மெதுவாக பெய்யும் என்றும் மீண்டும் இரவு முதல் நாளை காலை வரை மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மேலும் பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்யும் என நம்புவோம் என்றும் தற்போதைக்கு, கரையோரப் பகுதிக்கு அருகாமையில் மேகக் குவிதல்அதிகமாக உள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.