1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! இனி இப்படி மருந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை பாயும்..!

1

மத்திய பார்மசி கவுன்சில் ஆனது பார்மசி தொழில் ஒழுங்குபடுத்துதல் விதிமுறைகள் 2015 என்னும் சட்டத்தை உருவாக்கியுள்ளது. இச்சட்டத்தின்படி டிபார்ம் படிப்பை முடித்தவர்கள் மருத்துவமனைகளின் பல்வேறு பணிகளிலும் பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மருந்து சீட்டு எழுதி தருவதற்கு அனுமதி அளிக்கும் திட்டத்திற்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை. தற்போது தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கூட்டுதல் தலைமை செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மருந்து கட்டுப்பாடு துறையின் மூலம் தமிழகம் முழுவதும் மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களில் அதிரடியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் மருந்துகள் மற்றும் அழகு சாதனச்சட்டம், 1940 மற்றும் மருந்து விதிகள், 1945-ன் கீழ் விதி மீறல்களில் ஈடுபட்ட மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள் மீது கடந்த (01.04.2023 - 31.12.2023) 9 மாதங்களில் 219 மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் 381 மருந்து நிறுவனங்களில் அதிரடியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.விற்பனையாளர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மேலும் தரமற்ற மருந்துகளை விற்பனை செய்த மொத்த விற்பனை நிறுவனங்களில் 21 மருந்து விற்பனை நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை / விநியோகம் செய்த 9 மருந்து விற்பனை உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை அல்லது விநியோகம் செய்வது மருந்து மற்றும் அழகு சாதனச் சட்டம் 1940 மற்றும் மருந்துகள் விதிகள் 1945 ன் படி குற்றம் ஆகும். இதன்படி மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது இந்த சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

Trending News

Latest News

You May Like