1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! கார் கழுவினால் ரூ.5,000 அபராதம்.. அரசு அதிரடி..!

W

கோடை காலத்தை எதிர்கொள்ளும் வகையில், குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க கர்நாடக அரசு கடும் கெடுபிடி காட்டி வருகிறது.

மழை பற்றாக்குறை, ஆழ்துளை கிணறுகளின் வறட்சி, நிலத்தடி நீர் குறைதல் உள்ளிட்ட காரணங்களால் போதுமான தண்ணீர் இல்லாததால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

ஐ.டி., நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், கல்லுாரிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட் வாய்ப்பு உள்ளது.

பெங்களூருவில் கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க, கடும் கட்டுப்பாடுகளை விதித்து குடிநீர் வாரியம் உத்தரவிட்டுள்ளது. கார் கழுவுதல், தோட்ட பராமரிப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்தினால், ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் அதிக எண்ணிக்கையில் ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், பெரும்பாலானோர் கார்கள் வைத்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like