மக்களே உஷார்..! நீலகிரிக்கு நாளை 'ரெட் அலெர்ட்'..!

தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளின் மேலும், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று, இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம்.
கோவை, நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று கன அல்லது மிக கனமழை, திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள், அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அப்பகுதிக்கு, 'ரெட் அெலர்ட்' விடுக்கப்பட்டுஉள்ளது.
கோவை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், நாளை கனமழை முதல் மிக கனமழை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புஉள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.