1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! இனி சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் ரூ. 1 லட்சம் வரை அபராதம்..!

Q

கோவாவில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் சம்பவங்கள், அனுமதியின்றி படகுகளை இயக்குதல், சுற்றுச்சுழல் மாசுபாட்டை ஏற்படுத்துதல், சுற்றுலா பொருட்களை வாங்கக்கோரி வியாபாரிகள் கட்டாயப்படுத்துதல், அனுமதிக்கப்படாத பகுதிகளில் மது அருந்துதல், பொதுஇடங்களில் சமைத்தல், அனுமதிக்கப்படாத பகுதிகளில் தண்ணீர் விளையாட்டு, டிக்கெட் விற்பனை, பிச்சை எடுத்தல், கடற்கரைகளில் வாகனங்களை இயக்குதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சம்பவங்களை தடுக்க கோவா அரசு அபராதம் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கோவாவில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் மீது குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ. 1 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்க மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா கவர்னரின் ஒப்புதலுக்குப்பின் சட்டமாக அமலாக உள்ளது.

Trending News

Latest News

You May Like