1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! இனி இந்த பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்யாதீங்க..!

1

 தமிழக போக்குவரத்து துறை கூறியிருப்பதாவது:-

நாகாலாந்து உள்ளிட்ட வெளி மாநில ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டுக்கு தமிழக அரசுக்கு ரூ. 34.56 கோடி இழப்பு ஏற்படுகிறது. குறிப்பாக சாலை வரி செலுத்தாமல் வெளி மாநில ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவதாகவும், விதிகளை மீறுவது, பயணிகளுக்கு பாதுகாப்பு இன்றி இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதையடுத்து வெளி மாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகளாக மாற்றி இயக்குவதற்கு அறிவுறுத்தல் வழங்கியது. மேலும் இதற்காக கால அவகாசமும் வழங்கியிருந்தது.

தொடர்ந்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில்,18 ஆம் தேதியுடன் இந்த அவகாசம் முடிகிறது. எனவே இன்று முதல்  விதிகளை மீறி வெளிமாநில ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டால், பேருந்துகளை பறிமுதல் செய்யவும், அபராதம் விதிப்பதும் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே பயணிகள் இந்த பேருந்துகளில் முன்பதிவு செய்திருந்தால் உடனே மாற்றிக்கொள்ளவும் என்றும், இந்த பஸ்களில் பயணிக்கும் போது அந்த பஸ் பறிமுதல் செய்யப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் என்பதால் பயணிகள் இது போன்ற பேருந்துகளில் முன்பதிவு செய்யவேண்டாம். அது எந்தெந்த பஸ்கள் என்பதனை பயணிகள், www.tnsta.gov.in இந்த இணையத்தளத்தில் பார்ந்து தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like