1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! அதிகரிக்கும் நிபா வைரஸ் பாதிப்பு; ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

Q

கேரளா மலப்புரம் மற்றும் பாலக்காடு பகுதிகளில், நிபா வைரஸ் பரவல் உள்ளது. ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

வவ்வால், பன்றி வாயிலாக, நிபா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் நிபா வைரஸ் பரவலை தடுக்க, எல்லையோர மாவட்டங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் கண்டறியப்படும், காய்ச்சல் குறித்தான முழு தகவல்களையும், பொது சுகாதார துறைக்கு தெரிவிக்க வேண்டும். கேரளாவில் இருந்து வருவோருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால், தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், மனநிலை மாற்றம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Trending News

Latest News

You May Like