1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! மே 22ல் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு..!

Q

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா அளித்த பேட்டி:
மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் மே.22ல் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது வடக்குத் திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும்.
இதன் காரணமாக கோவை மாவட்ட மலைபகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் (மே.20) கன முதல் மிக கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் இயல்பைவிட 83 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. இயல்பாக பெய்ய வேண்டிய மழையின் அளவு 4 செ.மீ., ஆனால் 7.4 செ.மீ., மழை பெய்துள்ளது. பருவமழை அடுத்தவாரம் மேலும் வலுவடையும்.
இவ்வாறு அமுதா கூறினார்.

Trending News

Latest News

You May Like