மக்களே உஷார்..! வரும் 23ம் தேதி வங்கக்கடலில் புதிய புயல் உருவாகுதாம்..!
தமிழகத்தில் கடந்த பதினைந்து நாட்களாக தென்மாவட்டங்களிலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம்,கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது மழை பெய்து வந்தது. நெல்லை, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பதிவானது.
இந்நிலையில் நவ.23ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
சென்னையில் இன்றும், நாளையும் (நவ.20) ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. நவ. 21ம் தேதி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிறது.
பின்னர் அது நவ.23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாக உள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ளதால் நாகை மீனவர்கள் கடலுக்குச் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கர்த்துக்கொண்டுள்ளது.