மக்களே உஷார்..! இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!

சாலைகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இயக்குவதற்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயமானதாகும். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஓட்டுநர் உரிமம் பெறுவது என்பது கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து எல்.எல்.ஆர். பதிவு செய்ய வேண்டும். பின்னர் வாகன ஆய்வாளர் முன்பு ஓட்டிக் காட்டி, போட்டோ எடுத்துக் கொண்ட பின் நேரில் சென்று ஓட்டுநர் உரிமம் பெற்று கொள்ள வேண்டும்.
இதை எளிமையாக்கும் விதமாக ஜூன் 1 முதல் புதிய விதிமுறைகள் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓட்டுநர் உரிமம் பெற விரும்புபவர்கள் தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்களில் ஓட்டுநர் தேர்வில் பங்கேற்கலாம். உரிமத் தகுதிக்கான சோதனைகளை நடத்தி சான்றிதழ் வழங்க தனியார் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
மைனர் வாகனம் ஓட்டினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும். 18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால், 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இது தவிர, வாகன உரிமையாளரின் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படலாம்.
அதிக வேகத்தில் வாகனம் ஓட்டினால், 1000 முதல் 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும்.