1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! கர்நாடகாவுக்கு ரெட் அலெர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Q

கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெங்களூரு நகரமே மழையால் வெள்ளக்காடானது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததோடு, சுரங்கப்பாதைகளில் பல அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது.
இந்நிலையில் கர்நாடகாவுக்கு ரெட் அலர்ட் என்ற மிக அதிக அளவிலான மழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையின் படி, 204 மி.மீ., அல்லது அதற்கு அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு;
தக்ஷன கர்நாடகா
உடுப்பி
உத்தர கன்னடா
ஷிவ்மோகா
சிக்கமகளூரு
ஹாசன்
குடகு
ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்கள்;
பெலகாவி
தார்வாட்
கடாக்
ஹாவேரி
தாவணகெரே
மைசூரு
பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு நகர் மற்றும் புறநகர், கொப்பல், பாஹல்கோட் ஆகிய இடங்கள் ஆரஞ்சு அலர்ட்டுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

Trending News

Latest News

You May Like