மக்களே உஷார்..! நவம்பர் 28-ம் தேதிக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகிறது..!
தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் இறுதியில் துவங்கும் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை, இயல்பை விட 3 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் 01.10.2024 முதல் 17.11.2024 வரை 298.7 (மி மீ) மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 288.9 (மி மீ) தான் பெய்யும். ஆகவே தற்போது வரை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 3 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. மேலும், சென்னையில் வடகிழக்கு பருவமழை தற்போது வரை, இயல்பை விட 5 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது
இதுகுறித்து வானிலை மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, வரும் நாட்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழையின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது. நவம்பர் 28-ம் தேதிக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு உள்ளது. நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் உருவாகும் வானிலை மாற்றங்கள் பொதுவாக தமிழகத்தின் வடக்கு பகுதி அல்லது ஆந்திராவின் தெற்கு பகுதியை நோக்கி நகரும். காற்று நகரும் திசையை பொறுத்து மழை இருக்கும். வருகிற 4-5 நாட்களுக்கு மழையின் தீவிரம் குறையும். ஆனால் முற்றிலும் வறண்டு போகாது. தெற்கு பகுதியில் சில இடங்களில் லோசான மழை பெய்யும். வெப்பநிலை அதிகபட்சமாக 32 செல்சியஸ் முதல் 33 செல்சியஸ் வரையும் குறைந் தபட்சம் 25 செல்சியஸ் வரையும் இருக்கும் என்றார்.