மக்களே உஷார்..! இனி இதை செய்தால் 7 வருடம் ஜெயில்.. வேளாண்மை அதிகாரி வார்னிங்..!
திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு பிசான பருவத்துக்கான ரசாயன உரங்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. யூரியா 4149 டன், டி.ஏ.பி. 623 டன். பொட்டாஷ் 1038 டன் காம்ப்ளக்ஸ் 2203 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 45 கிலோ எடை கொண்ட யூரியா உரம் முழு விலை 1457.29 அரசு மானியமாக 1190,79 வழங்குகிறது. விவசாயிகளுக்கு 266.50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
எனவே விவசாய பயன்பாட்டுக்காக வழங்கப்படும் மானிய விலை யூரியாவை தவறாக தொழிற்சாலை பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தினால் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் படி குறைந்தது 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருளின் மதிப்புக்கேற்க அபராதமும் விதிக்கப்படும்.
முறையற்ற முகவர்களிடம் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான உரங்களை வாங்கக்கூடாது. மானிய விலையில் உரம் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மானிய விலை உரங்களை பிற மாநிலம், மாவட்டங்களுக்கு அனுப்புவதோ கொள்முதல் செய்யவோ கூடாது. அனுமதி பெற்ற நிறுவனங்களிடம் கொள்முதல் செய்து அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும். அனுமதி பெறாமல், கலப்பு உரங்களை இருப்பு வைத்து விற்கக்கூடாது. அச்சிடப்பட்ட விலைக்கு மேல் விலை வைத்து விற்பனை செய்யக் கூடாது. விவசாயிகளுக்கு தேவையற்ற இடுபொருட்களை இணைத்து விற்பனை செய்யக்கூடாது. தரமற்ற போலியான உரங்களை விற்பனை செய்யக்கூடாது விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.