1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! தமிழகத்தில் 2 நாட்கள் மிக கனமழை தொடரும்..!

1

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிக்கையில், தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்று தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி,மதுரை, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. மதுரை, ஊட்டி, கூடலூர், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்ந்து வருகிறது. நாகர்கோவில் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். திருநெல்வேலி, தூத்துக்குடியில் சாரல் மழை பெய்தது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே கன மழை காரணமாக குளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல், கொடைக்கானல் தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. ஊட்டி, கூடலூர், கும்பகோணம், அய்யம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.

இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடலில் நாளை (மே 22) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது., தென்மேற்கு வங்கக்கடலில் நாளை (மே 22-ம் தேதி) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது. இது வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மே 24 ஆம் தேதி காலை மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளது. 

இதனால் வடக்கு ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் மே 24, 25 ஆம் தேதி கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மே 23-ம் தேதிமுதல் மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கும், மே 24=ம் தேதிமுதல் வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், கடலுக்குச் சென்ற மீனவர்கள் மே 23 ஆம் தேதிக்குள் கரைக்குத் திரும்பவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Trending News

Latest News

You May Like