1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூரில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

1

தமிழகத்தில் பல பகுதிகளில் தற்போதே பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.கடந்த வாரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், வட மாவட்டங்கள், கொங்கு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. தற்போதும் காலையில் லேசாக வெயில் இருந்தாலும் மாலைக்கு மேல் பலத்த காற்றுடன் பொழிவு இருக்கிறது. இதனால் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் நீலகிரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக மண் சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 12 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 21 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நேற்று முன் தினம் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (19.07.2024) காலை 0530 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காலை 08.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப் பெற்று வமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரிசா மற்றும் வட ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று (20.07.2024) ஒரிசா கடற்கரையை பூரிக்கு அருகில் கடக்கும்.

இதன் மூலம் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை முதல் 25ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

Trending News

Latest News

You May Like