மக்களே உஷார்..! இன்று முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை வெப்ப அலை வீசும்..!

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும். இன்று முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசும்.
வடகிழக்கு மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசவுகரியம் ஏற்படலாம்.
தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.