1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! வங்கி கணக்கை 3 வருடமா யூஸ் பண்ணமா இருக்கீங்களா?

1

 3 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாமல் இருக்கும் கணக்குகளை ஜூன் 1ம் தேதி ரத்து செய்யப்படும் என பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.

இதுபோன்று செயல்படாத வங்கி கணக்குகளால் வங்கி பல நடைமுறை சிக்கல்களை சந்திக்க வாய்ப்புள்ளது. வங்கியின் உண்மையான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் பிரச்சனை ஏற்படும். மேலும் செயல்படாத கணக்கை டிஜிட்டல் முறையில் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. 2024ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி வரை 3 ஆண்டுகளாக பயன்படுத்தாத வங்கி கணக்குகள் தற்போது ரத்து செய்யப்படும்.

ஒருவேளை வாடிக்கையாளர்கள் அந்த செயல்படாத கணக்கை பயன்படுத்த வேண்டுமெனில் அதற்கும் ஏற்பாடு செய்துள்ளது வங்கி நிர்வாகம். எந்த கிளையில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறீர்களே அந்த கிளைக்கு சென்று, உங்களின் புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்று, முகவரி சான்று கொடுத்து கணக்கை புதுப்பித்து கொள்ள முடியும்.

ஆனால் 3 ஆண்டுகளாக எந்தவிதமான பரிவர்த்தனையும் மேற்கொள்ள சில கணக்குகளையும் வங்கி நிர்வாகம் ரத்து செய்ய போவதில்லை என தெரிவித்துள்ளது. அதாவது பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக டீமேட் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு, லாக்கர்கள் வசதி வைத்திருக்கும் வங்கி கணக்கு ஆகியவை ரத்து செய்யப்படாது. மேலும் 25 வயதுக்கு குறைவான வாடிக்கையாளர்களான மாணவர்களின் வங்கி கணக்கு, குழந்தைகளின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கு, அரசின் திட்டங்களில் முதலீடு செய்வதாக தொடங்கப்பட்ட வங்கி கணக்கு ஆகியவை ரத்து செய்யப்படாது. அதோடு நீதிமன்றம், வருமான வரித்துறை மற்றும் சட்டப்பூர்வமாக மூடக்கப்பட்ட கணக்குகள் ரத்து செய்யப்படாது என்றும் வங்கி தெளிவுப்படுத்தி உள்ளது.

செயல்படாத கணக்குகளை ரத்து செய்யும் போது, அதில் உள்ள இருப்பு தொகை வங்கிக்கு சென்றுவிட வாய்ப்புள்ளது. அதன் பிறகு அந்த தொகையை பெற வேண்டுமெனில் உரிய ஆவணங்கள் கொடுத்து மட்டுமே பெற முடியும். எனவே வங்கியின் தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்குகள் தேவையில்லை என நினைக்கும் போது, அதை முறையாக கேன்சல் செய்வது வாடிக்கையாளர்களின் கடமை ஆகும். ஏனெனில் இன்சூரன்ஸ், ஃபிகஸ்ட் டெபாசிட் அல்லது வேறு ஏதாவது தேவைக்காக இந்த வங்கி கணக்கு எண்ணை குறிப்பிட்டிருந்தால், எதிர்காலத்தில் அந்த கணக்கில் பணம் வரவு வைக்க வாய்ப்புள்ளது. எனவே வாடிக்கையாளர் முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.

Trending News

Latest News

You May Like