மக்களே உஷார்..! இனி சாலைகளில் சுற்றித்தியும் மாடுகளுக்கு அபராத தொகை உயர்த்த முடிவு..!
சென்னை மாநகர்ட்சிக்குட்பட்ட பகுதிகளில், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் அவ்வப்போது அசம்பாவிதங்களும் நடக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்த சாலைகளில் மாடுகள் திரிந்தால் அதனை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதங்களும் விதிக்கின்றனர்.
சென்னை பெருநகர மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .சாலைகளில், தெருக்களில் மாடு முதல்முறையாக பிடிக்கப்பட்டால் அதன் உரிமையாளருக்கு 10,000 ரூபாய் அபராதமும், மீண்டும் பிடிக்கப்பட்டால் 15,000 ரூபாய் அபராதமாகவும் வசூலிக்கப்பட உள்ளது. மேலும், பராமரிப்பு செலவிற்கு மூன்றாம் நாளில் இருந்து, நாள் ஒன்றிக்கு 1000 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது.
மேலும் இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மொத்தம் 1,425 மாடுகள் பிடிக்கப்பட்டு, 59 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தொழில் வரியை 35% உயர்த்த மாமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழில்வரி உயர்வை அங்கீகரிக்க அரசுக்கு முன்மொழிவினை அனுப்ப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.