மக்களே உஷார்..! கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 4 பேர் பலி..!

கொரோனா மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. டில்லி, மஹாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பல நலத்துறை தகவலின்படி நேற்று முன்தினம் துவங்கி, நேற்று காலை 8:00 மணி வரை நாடு முழுதும் புதிதாக 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுதும், 5,755 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று மட்டும் நான்கு பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 45 வயது கர்ப்பிணியும், மஹாராஷ்டிராவில் 63 வயது முதியவரும், கேரளாவில் 59 வயது நபர், தமிழகத்தில் 79 வயது நபரும் இறந்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் கொரோனாவுக்கு இதுவரை 59 பேர் பலியாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 18, கேரளாவில் 12, டில்லி, கர்நாடகாவில் தலா ஏழு தமிழகத்தில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.