மக்களே உஷார்..! உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி; 48 மணி நேரத்தில் புயலாக மாறும்!
இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடக்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் 48 மணி நேரத்தில், புயலாக மாறி மேற்கு - வடமேற்கு திசையில் நகரும்.
நாளை மறுநாள் வலுவடைந்து 'டானா' புயலாக வலுப்பெறும். அக்.,24ம் தேதி மேற்குவங்கம், ஒடிசா கடற்கரையையொட்டி, 'டானா' புயல் கரையைக் கடக்கக்கூடும். இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.