1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! புனேவில் முதல் உயிரிழப்பு; 101 பேருக்கு தீவிர சிகிச்சை..!

Q

மஹாராஷ்டிரா மாநிலம் புனே சுற்றுவட்டார பகுதிகளில், குய்லின்-பார் சிண்ட்ரோம் என்ற நரம்பியல் கோளாறு கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. இந்த நோய், மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம், மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகளைத் தாக்கும். இதனால் 101 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். புனேவில் ஒரு நோயாளி இன்று உயிரிழந்தார். இதனால் இன்று முதல் மரணம் பதிவாகி உள்ளது.

அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் கிர்கித்வாடி, டி.எஸ்.கே. விஷ்வா, நான்டெட் நகரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த நோய்க்கு தடுப்பூசி கிடையாது. இந்த நோய் பாதிப்பு பாக்டீரியா, வைரஸ் தாக்கத்தால் ஏற்படுகிறது. அறிகுறிகள் வந்த உடன் நரம்பியல் மருத்துவரை அணுகினால் குணம் அடையலாம். அறிகுறிகள் தென்பட்ட உடனே டாக்டரை அணுகும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

முதுகு அல்லது கால்களின் ஆழமான தசை வலி, பக்கவாதம், சுவாச பிரச்னை, பேசுவதில் சிரமம், பார்வை பிரச்னைகள், இருமல், சளி அறிகுறிகள் ஆகும். அரிய நோய் பரவல் அதிகரித்து கொண்டே செல்வதால், சுகாதார அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அபாயமான கட்டத்தில் 16 பேர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளனர்.

9 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களை அதிகமாக இந்த அரிய நோய் பாதிப்பு அவதிகுள்ளாக்கி வருகிறது. இதனால் 25,578 வீடுகளில் நோய் பாதிப்பு இருக்கிறதா என சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Trending News

Latest News

You May Like