1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..!இன்று முதல் 21ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்..!

Q

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை நெருங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வரும் 21ஆம் தேதி வறண்ட வானிலை நிலவும் எனவும், ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என கூறியுள்ளது. எனினும், காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்க கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும், வெயில் மிதமான அளவிலேயே இருக்கும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று ஈரோட்டில் 98 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like