1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! தமிழகத்தில் பரவும் மர்ம காய்ச்சல்.. அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

1

சென்னையில் திடீர் தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. பலருக்கு காய்ச்சலுடன் தொண்டை வலி, சளி, இருமல் உள்ளிட்ட உடல்நிலை பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் மர்ம காய்ச்சல் பரவுவதால் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் புற நோயாளிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்து வருகிறது. இது பெரும்பாலும் சாதாரண பாதிப்புகள் என்றாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு பலவித உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

Fever

மேலும் கடந்த மாதம் பெய்த மழையின்போது டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் ஈக்களின் பெருக்கமும் அதிகரித்து விட்டது. ஈக்கள் அதிக அளவில் பெருகியதால் அதன்மூலம் வாந்தி, பேதி, காலரா, டைபாய்டு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பழங்கள், மீன், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஈக்கள் மொய்ப்பதால், அந்த உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஈக்கள் மூலம் 600 வகையான பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுகின்றன. இந்த தொற்றுக்களே வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன.

fever

சென்னையில் அதிகரித்து வரும் மர்ம காய்ச்சலால் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ஈக்கள் மூலமே அதிக நோய் பரவுகிறது. எனவே மீன் மற்றும் இறைச்சிகளை நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகளை நன்றாக அலசியபின் சாப்பிடலாம். ஈக்கள் மொய்க்கும் இடங்களில் உணவுப்பொருட்களை வைக்கக் கூடாது என்று மருத்தவர்கள் கூறியுள்ளனர்

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “சென்னையில் கொசு மற்றும் ஈக்களை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் மழைநீர் வடிகால் தொட்டி, வடிகால், நீர்நிலைகள், குப்பை தொட்டிகள் இருக்கும் பகுதிகளில் மருந்து தெளிக்கப்படுகிறது. கொசு புகையும் அடிக்கப்படுகிறது. பொதுமக்களும் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்” என்றனர்.

Trending News

Latest News

You May Like